"சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றுங்கள்" பிரதமர் வேண்டுகோள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், 'ஹர் கர் திரங்கா' இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களின் முகப்பு படத்தை மாற்ற வேண்டும் என்றும், நமது நாட்டிற்கும் நமக்கும் இடையேயான பிணைப்பை பறைசாற்றும் வகையில், இந்த தனித்துவமான முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com