காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர் வீட்டுக்கு நேரில் சென்ற பினராயி
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணியின் வீட்டுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் கேரள மாநிலம் கொச்சி இடப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக கேரள முதல்வர் பினராய் விஜயன் ராமச்சந்திரனின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
Next Story
