"பெண்களை சமையலறைக்குள் தள்ள சிலர் முயற்சி" - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சடங்குகள் மற்றும் நம்பிக்கையின் பெயரில் பெண்களை பொது இடங்களிலிருந்து சமையலறைக்கு தள்ளும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
"பெண்களை சமையலறைக்குள் தள்ள சிலர் முயற்சி" - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
Published on

கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச அளவில் கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை துவக்கி வைத்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கலை நிகழ்வில் பங்கேற்க அதிகளவில் பெண்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். சடங்குகள் மற்றும் நம்பிக்கையின் பெயரில் பெண்களை பொது இடங்களிலிருந்து சமையலறைக்குள் தள்ளும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக அப்போது அவர் குற்றம் சாட்டினார். இந்த கலை நிகழ்ச்சியில் 31 நாடுகளை சேர்ந்த பிரபல கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com