Pinarayi Vijayan| ED Raid|பினராயி வீட்டில் ரெய்டை முடித்து வெளியே வந்ததும் குலைநடுங்கிய ED ஆபீஸர்ஸ்

பினராயி வீட்டில் ரெய்டை முடித்து வெளியே வந்ததும் குலைநடுங்கிய ED ஆபீஸர்ஸ்

பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு - சூறையாடப்பட்ட ED கார் கேரளத்தில் பினராயி விஜயன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டும், அதை தொடர்ந்து நடந்த தாக்குதல் சம்பவங்களும் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பி இருக்கின்றன... கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லத்தில் அதிரடியாக நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர். கொச்சி கனிமவள நிறுவனம் தொடர்பான பணமோசடி வழக்கில், திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீடு உள்ளிட்ட பத்து இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நிறைவடைந்து அதிகாரிகள் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டபோது, அங்கு நூற்றுக்கணக்கான சி.பி.எம் தொண்டர்கள் திரண்டனர். மத்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு செங்கற்கள், தடிகள் மற்றும் முட்டைகளால் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், கேரள அரசியல் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், தனது வீட்டில் நடந்த ரெய்டு, சிலருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என ராகுல்காந்தியை மறைமுகமான சாடினார். மேலும், மத்திய அரசின் இதுபோன்ற எந்தவித நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com