அழைப்பு விடுத்த பினராயி..தவிர்க்க முடியாத சூழலால் தவிர்த்த CM ஸ்டாலின்
கேரளாவில் "லோக அய்யப்ப சங்கமம்"- தமிழக முதல்வர் கலந்துகொள்ள அழைப்பு
கேரள மாநிலம் பம்பையில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி, திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான “லோக அய்யப்ப சங்கமம்” நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் கடிதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story
