பரவி வரும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்... கொல்லப்படும் பன்றிகள் - பீதியில் கேரள மக்கள்

x

கேரள மாநிலம் ஆலப்புழாவில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆலப்புழா தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பன்றிப்பண்ணையில், 2 பன்றிகள் திடீரென இறந்தன. அவற்றுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 9 பெரிய பன்றிகள் மற்றும் 9 குட்டி பன்றிகள் கொல்லப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு இறைச்சி கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்