Petrol Price | 4 ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை
4 ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை
#petrolprice #iranwar கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு கேலன் பெட்ரோல் 396 ரூபாயாக உயர்ந்துள்ளது என அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு அமெரிக்க மக்களிடையே பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன் உலக சந்தையிலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
