Petrol Diesel Price | பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை.. நடந்தே சென்ற CM.. சைக்கிளில் சென்ற அமைச்சர்

பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை.. நடந்தே சென்ற CM.. சைக்கிளில் சென்ற அமைச்சர்

Petrol Diesel Price | பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை.. நடந்தே சென்ற CM.. சைக்கிளில் சென்ற அமைச்சர்

மேற்கு ஆசியப் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு எரிபொருள் மற்றும் பொருளாதாரச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பல்வேறு மாநில முதலமைச்சர்களும் அமைச்சர்களும் எளிமையான முறையில் பயணம் மேற்கொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றனர்.​ பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, பாட்னாவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து மாநிலச் செயலகத்திற்கு எவ்வித ஆடம்பர வாகனமும் இன்றி, நடந்தே சென்று தனது பணியைத் தொடங்கினார். ​ இதேபோல், டெல்லி அமைச்சர் பர்வேஷ் சாகிப் சிங், டெல்லி நகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தனது சொகுசு காரைத் தவிர்த்துவிட்டு, மிதிவண்டியில் வருகை தந்தார். ​மற்றொருபுறம், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், புனேயில் இருந்து பெங்களூருவிற்குத் தனது வழக்கமான சிறப்பு விமானப் பயணத்தைத் தவிர்த்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொதுப் பயணிகள் செல்லும் Economy Class விமானத்தில் பயணம் செய்தார்

X

Thanthi TV
www.thanthitv.com