ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 785 ரூபாய். அடுத்த மாதத்தில் வேறு விலையாகவும் இருக்கலாம். ஆனால் அது உச்சத்தை நோக்கித்தான் செல்லுமென்பதில் மாற்றமிருக்காது. அன்றாடத் தேவைகளுக்கு மத்தியில் நாளொரு விலையும் பொழுதொரு உயர்வுமாக ஏறும் எரிபொருள் தேவையைத் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும் போது, மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டிய தருணமிது எனக் குறிப்பிட்டார். மாற்று எரிபொருள் விறகடுப்புதானா என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது