Petrol Bunk | Fire | தீ பற்றி எரிந்த படி பெட்ரோல் பங்குக்குள் புகுந்த கார் - அதிர்ச்சி காட்சி

x

ஹைதராபாத்தில் சாலையில் சென்ற ஆம்னி கார் சிலிண்டர் வெடித்து தீ பற்றிய நிலையில், பெட்ரோல் நிலையத்திற்குள் நுழைந்த‌தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட‌து. அந்த காட்சிகளை முதலில் பார்க்கலாம்..

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சாலையில் சென்ற ஆம்னி காரின் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

இதையடுத்து, காரை ஓட்டி வந்த‌வர் கீழே குதித்து உயர் தப்பினார். ஆனால், தீ பற்றி எரிந்த ஆம்னி காரில் ஹேண்ட் பிரேக் போடாத‌தால் சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த‌து.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட‌து. துரிதமாக செயல்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயணைப்பு கருவிகளை கொண்டு காரில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட‌து.


Next Story

மேலும் செய்திகள்