காருக்குள் அடைத்ததால் மூச்சடைத்து உயிரிழந்த வளர்ப்பு நாய்
உத்தரப்பிரதேசத்தில் காருக்குள் அடைக்கப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று, மூச்சடைத்து துடிதுடித்தபடி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது..
மதுராவில் தரிசனத்திற்காக வந்த தம்பதி, வளர்ப்பு நாயை காருக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர்.
வெப்பம் தாங்க முடியாமல் காருக்குள் மூச்சுவிட சிரமப்பட்ட நாய் தொடர்ந்து குரைத்து சத்தம் எழுப்பியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள்,
காரின் பூட்டை உடைத்து நாயை மீட்டு உடலில் தண்ணீர் ஊற்றி, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் நாயை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது மூச்சடைத்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அலட்சியத்துடன் செயல்பட்ட அந்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
