கோரிக்கை மனுக்களோடு ஊர்ந்து வந்த `பாம்பு’.. ம.பி.யில் ஆடிப் போன ஆபீசர்ஸ்

x

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கோட்ட ஆணையாளர் அலுவலகத்திற்கு உடல் முழுவதும் கோரிக்கை மனுக்களை அணிந்து பாம்பைப் போல ஊர்ந்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பிஷான்கேடி பகுதியை சேர்ந்த பஜ்ரங்கி என்பவர் தங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய கோரி பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்காததால், இதுவரை வழங்கிய 500க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களையே ஆடையாக அணிந்து ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.


Next Story

மேலும் செய்திகள்