சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை உருளைகிழங்கை பயிரிட்டதாக கூறி குஜராத்தை சேர்ந்த சில விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண விரும்புவதாகவும், விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் எங்களது உருளைக கிழங்கு விதைகளை வாங்கி, பயிரிட்டு எங்களிடமே விற்பனை செய்யலாம் என்றும் கூறினார். எங்களோடு இணைந்து செயல்படலாம் அல்லது வேறு உருளைக் கிழங்கை விளைவிக்கலாம் என்றும் கூறியதுடன், வழக்கு விசாரணையை எதிர் கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.