

ஆந்திராவில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்திற்கு 17 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ராயலசீமா, கடப்பா, குர்னூ மற்றும் அனந்த்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சாலைகளில் மார்பளவில் ஓடிய வெள்ளநீரில் தத்தளித்தவர்களும், வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. திருப்பதி மலை அடிவாரத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் நூற்றுகணக்கான பக்தர்கள் சிக்கி தவித்தனர். இந்த நிலையில் மழை வெள்ளத்திற்கு மாநிலம் முழுவதிலும் 17 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஜெகன்மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார்.