தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் - இயக்குனர் கே.பாக்யராஜ் பேச்சு
திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி காதல் கதை ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கே. பாக்யராஜ், திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாகவும், இந்த படங்களுக்கு எதிரான பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
