வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் எவ்வளவு அபராதம்..?

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி, தாக்கல் செய்யாமல் போனால் எவ்வளவு அபராதம் என்பதை தற்போது பார்க்கலாம்.
வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் எவ்வளவு அபராதம்..?
Published on

கட்டாயம் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?

எல்லோரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை. உதாரணமாக, வருமானம் இல்லை அல்லது வருமான உச்ச வரம்புக்குள் உள்ளது என்றால் கட்டாயம் இல்லை ஆனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது முக்கியம். காரணம் உங்களிடம் உள்ள சேமிப்புக்கான கணக்கை காட்டுங்கள் என்று வருமான வரித்துறை கேட்டால், அப்போது உதவும்.

அபராதம் எவ்வளவு ?

ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஜூலை 31க்குள் தாக்கல் செய்யாமல், அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் செலுத்துகிறீர்கள் என்றால் அபராதம் உண்டு. 5 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமான வாங்குபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம்

5 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுபவர்கள், ஜூலை 31க்குள் தாக்கல் செய்யாமல், டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்தால் 5 ஆயிரம் அபராதம், அப்போதும் செலுத்தாமல், மார்ச் 31க்குள் செலுத்துகிறார்கள் என்றால் 10 ஆயிரம் அபராதம்.

வருமான வரி தாக்கல் செய்யவது எப்படி?

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் 2 வழிகள் உள்ளன.

1. e filing எனப்படும் ஆன்லைன் முறை

2. வரிப்படிவத்தை நிரப்பி தாக்கல் செய்யும் முறை.

ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள் இ-ஃபைலிங் முறையில்தான் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்ப படிவம் மூலம் தாக்கல் செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்.

படிவம் மூலம் தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்று தாக்கல் செய்ய வேண்டும். கணக்கை தாக்கல் செய்த பின் அதற்கான அத்தாட்சியைப் பெற வேண்டும்.

X

Thanthi TV
www.thanthitv.com