பெகாசஸ் இந்திய அரசு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பதே, உச்சநீதிமன்ற உத்தரவின் முதன்மை அடிப்படை என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்பது உத்தரவின் இரண்டாவது அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அரசின் பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும் என உறுதியாக நம்புவதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.