ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை - திகார் சிறைக்கு விரைந்தது அமலாக்கத்துறை குழு

டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை - திகார் சிறைக்கு விரைந்தது அமலாக்கத்துறை குழு
Published on

ஐ.என்.எக்​ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, திகார் சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி அளித்தார். தேவைப்பட்டால் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கலாம் என்றும், அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறைக்குள் சென்று சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே, சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் அவரின் மகன் கார்த்தி ஆகியோரும் திகார் சிறைக்கு சென்றுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com