"ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ எதிர்ப்பு"
ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா விவாகாரத்தில் அவருக்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் கைமாறாக இந்தியாவிலும், வெளிநாடுகளில் பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அந்நிய முதலீடு பெறுவதில் 4 புள்ளி 62 கோடி ரூபாய் மட்டுமே அனுமதி இருந்த நிலையில், 731 கோடி ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணத்தை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்பித்துள்ளது.
மேலும் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்றும்,
அவருக்கு எதிராக போதிய ஆதாரம் மற்றும் ஆவணங்கள் இருப்பதாலேயே கைது செய்யப்பட்டார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிதம்பரத்தை ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை தன் செல்வாக்கால் கலைக்கக்கூடும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே அவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
