

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித் தலைவருமான பவன்கல்யாண்க்கு இன்று பிறந்த நாள் விழா. இதற்காக அவரது வீடு முன் பிளக்ஸ் வைப்பதற்காக சோக சேகர், அருணாசலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூன்று ரசிகர்கள் அங்கு சென்றனர். 25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.