Parliament session | நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சி கடும் விமர்சனம்

x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெறும் என்று அறிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்திற்கு மாறான தாமதம் என்றும், வெறும் 15 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தி என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் எந்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை, எந்த விவாதங்களும் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது என விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்