நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மழைக்கால கூட்டத்தொடரை அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது