Paper Leak | போராட்டத்தில் குதித்த ரோஜா.. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆவேசம்
போராட்டத்தில் குதித்த ரோஜா.. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆவேசம்
ஆந்திரா : வினாத்தாள் கசிவு - அமைச்சர் பதவி விலக ரோஜா வலியுறுத்தல் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது தலைமையில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. "நாரா லோகேஷ் அல்ல... நாரா லீக்கேஜ்" என விமர்சித்த ரோஜா, அரசு இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதாகவும், தேர்வர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.
