நடு ரோட்டில் தாறுமாறாக அடித்துக்கொண்ட பானிபூரி கடைக்காரர்கள் -ரத்தம் வடிய வடிய மயங்கிய நபர்
ஈரோட்டில் பானிபூரி விற்பனை செய்வது தொடர்பாக இரு கடைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். பந்தல்பாளையம் பகுதியில், பிரபல தனியார் பல்பொருள் விற்பனை நிலையம் முன்பு, பானிபூரி உள்ளிட்ட சாலையோர கடைகள் உள்ளன. இதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வரும் சதீஷ்குமார் என்பவருக்கும், அருகில் அதே கடை நடத்தி வரும் நபருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் சாலையில் சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த
சதீஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
