

மதுரை-சென்னை மற்றும் சென்னை-மதுரைக்கு கடந்த 1969-ஆம் ஆண்டிலிருந்து பயணம் மேற்கொண்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் தனது பொன்விழாவை கொண்டாடியது. ரயில் ஆர்வலர்களால் முன்னின்று நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் அந்த ரயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓட்டுனர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூத்த டிரைவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.