பம்பை வெள்ள பாதிப்பு : கேரள தேவசம்போர்டு அமைச்சர் ஆய்வு

சபரிமலை பம்பையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களை தேசவம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் ஆய்வு செய்தார்.
பம்பை வெள்ள பாதிப்பு : கேரள தேவசம்போர்டு அமைச்சர் ஆய்வு
Published on

சபரிமலை பம்பையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களை தேசவம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் ஆய்வு செய்தார். பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பம்பையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் நடைபாலம் உள்ளிட்ட பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் பக்தர்கள் தங்கும் விடுதி, உணவகங்கள், நடைபாதை கடைகள் சேதம் அடைந்தன. இந்நிலையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் உள்ளிட்டோர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். முன்னதாக நிலக்கல்லில் ஆதிவாசிகளுக்கு புத்தாடை, பரிசு பொருள்களை அமைச்சர் வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com