பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் குறித்த கூடுதல் தகவல்கள்

கடந்த 1970 ஆம் ஆண்டு மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பிறந்த குல் பூஷன் ஜாதவ் இந்திய கடற்படையில் பொறியியல் துறை அதிகாரியாக பணியாற்றியவர்.
பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் குறித்த கூடுதல் தகவல்கள்
Published on

கடந்த 1970 ஆம் ஆண்டு மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பிறந்த குல் பூஷன் ஜாதவ் இந்திய கடற்படையில் பொறியியல் துறை அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் உளவாளி என, பாகிஸ்தான் ராணுவத்தினரால் இவர் கைது செய்யப்பட்டார். சுதந்திர பலுசிஸ்தான் கோரி, போராடும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி மற்றும் ஆயுதப் பயிற்சி அளித்தார் என குற்றம் சாட்டிய பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், இவருக்கு 2017 ஏப்ரலில் மரண தண்டனை விதித்தது. ஆனால் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, குல்பூஷன் ஜாதவ் முன்னாள் கடற்படை அதிகாரி எனவும், விருப்ப ஓய்வு பெற்று, ஈரான் சென்று அங்கு தொழில் துவங்கி நடந்தி வந்தார் என கூறியது. மேலும், குல்பூஷன் ஜாதவ்வுக்கு, விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா, சர்வதேச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சர்வதேச நீதிமன்றம், 2017 மே 18 அன்று, ஜாதவ்வுக்கு விதிக்கபட்ட மரண தண்டனைக்கு இடைகால தடை விதித்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com