பாகிஸ்தான் - இந்தியா தாக்குதல் விவகாரம் : எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பரஸ்பர குற்றச்சாட்டு

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் ஓரே குரலில் ஆதரித்த போது, எதிர்க்கட்சிகள் மட்டும் இதனை மத்திய அரசு அரசியலாக்குவதாக குற்றம்சாட்டுவது ஏன் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் - இந்தியா தாக்குதல் விவகாரம் : எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பரஸ்பர குற்றச்சாட்டு
Published on

எதிர்க்கட்சிகளின் தவறான இந்த பேச்சை பாகிஸ்தான் தனது தரப்பு வாதத்தை வலுப்படுத்த பயன்படுத்தி கொள்வதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பாதுகாப்பு படையினருக்கும், அரசுக்கும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு ஆதரவளித்ததாகவும், ஆனால், அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர், வீரர்களின் தியாகத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சித்ததுடன், காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியதாக, தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com