எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் வரைந்த ஓவியங்கள்

மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தன்னம்பிக்கை
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் வரைந்த ஓவியங்கள்
Published on

காண்போரை கவர்ந்திழுத்து மனதை மயக்கி தன்வசப்படுத்தக்கூடிய ஆற்றல் ஓவியத்துக்கு உண்டு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்ச்சிகளை வண்ணங்களில் வெளிப்படுத்தும் வித்தை தெரிந்தது தான் ஓவியம். இப்படிபட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியிருக்கிறார்கள், எச் ஐ வியால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து தவிக்கும் இவர்கள்...

இந்த ஓவிய கண்காட்சி சென்னை லலித் அகாடமியில் நடைபெற்றது.

மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் ஏற்படவேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஐஸ்வர்யா மணிவண்ணன்.

2003ம்ஆண்டு முதல் இவர்களுக்கென செயல்படும் காப்பகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட நிதி திரட்டவே இந்த கண்காட்சி என்று கூறுகிறார் இந்த காப்பகத்தின் தலைவர்..

X

Thanthi TV
www.thanthitv.com