"தடுத்து நிறுத்தப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள்" - பிரதமர் மோடியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்

டெல்லிக்கு எடுத்து வரப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் பிற மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
"தடுத்து நிறுத்தப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள்" - பிரதமர் மோடியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்
Published on
டெல்லிக்கு எடுத்து வரப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் பிற மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக தாம் மத்திய அரசாங்கத்தில் யாரை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்பதை பரிந்துரைக்குமாறும் அவர் பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்டார். கொரோனாவால் அதிகம் பாதித்த மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் எதுவும் இல்லாததால் ஆக்சிஜன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com