செங்கல் சூளை தொழிலாளர்களை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்
கர்நாடக மாநிலம், விஜயபுராவில் செங்கல் சூளை தொழிலாளர்களை அதன் உரிமையாளர் கொடூரமாக தாக்கிய சம்பவம், சமூகத்தை உலுக்கியுள்ளது. காந்தி நகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் சிக்கலிகி கிராமத்தைச் சேர்ந்த 3 பேர், சங்கராந்தி பண்டிகைக்கு ஊருக்குச் சென்று விட்டு தாமதமாக வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த செங்கல் சூளை உரிமையாளர் கேமு ராத்தோட், அவர்களை மிருகத்தனமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Next Story

