மும்பையில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இரண்டு லட்சம் எலிகள் கொல்லப்பட்டுளளது. எலிகள் மூலம் பல்வேறு கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அவற்றை அழித்து வருவதாக, மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. எலிகளை அழிக்கும் பணியில் 27 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. இவர்கள் அனைவரும் பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி எலிகளை அழித்து வருகின்றனர்.