ஆன்லைன் நிதி மோசடிகளை தடுக்க உத்தரவு

தொலைத் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ஆன்லைன் நிதி மோசடிகளை தடுக்க உத்தரவு
Published on

தொலைத் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

செல்போனில், விரும்பத்தகாத தகவல்கள், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்ந்து தொல்லை அளித்தல், தடுப்பு குறித்து மத்திய அரசு ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது.

அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொலை தொடர்பு சந்தா தாரர்கள் துன்புறுத்தப்படுவதாக கூறினார். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கூறினார். டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்கவும், தொடர்ந்து ஈடுபட்டால் இணைப்புகளை துண்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவு என்னும் மைய முகமை ஏற்படுத்தவும், டிஜிட்டல் சூழலியல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை வலுப்படவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com