`ஆபரேஷன் சிந்தூர்' - 17 பெண் குழந்தைகளுக்கு "சிந்தூர்" என பெயரிட்ட பெற்றோர்கள்
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. குஷிநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 நாட்களில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிந்தூர் என்று பெயரிட்டுள்ளனர்". தங்கள் மகள்கள் வளரும்போது இப்பெயரின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்வார்கள் என்றும், தாய் நாட்டிற்கு கடமைப்பட்ட பெண்களாக தங்களை உணர்வார்கள் என்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
Next Story
