

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையிலிருந்து இரண்டாவது முறையாக நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து ஒரு ஷட்டர் வழியாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.