

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலை ஏறும் முன், முக்கிய நிகழ்வான எருமேலியில் பேட்டை துள்ளும் நிகழ்வுக்கு 50 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்ட வேண்டும் எனக் கூறியுள்ள கோயில் நிர்வாகம், திருவாபரண பெட்டி ஊர்வலம் ஜனவரி 12-ந்தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் என கூறியுள்ளது.