சபரிமலையில் 2 இளம் பெண்கள் மட்டுமே தரிசனம் - அறநிலையத்துறை அமைச்சர் பேச்சால் பரபரப்பு

சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததாக 51 இளம்பெண்களின் பட்டியலை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தது.
சபரிமலையில் 2 இளம் பெண்கள் மட்டுமே தரிசனம் - அறநிலையத்துறை அமைச்சர் பேச்சால் பரபரப்பு
Published on
சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததாக 51 இளம்பெண்களின் பட்டியலை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தது. இந்த நிலையில், கேரள சட்டசபையில் பேசிய அறநிலைய துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை செயல் அலுவலர் அளித்த அறிக்கையில், 2 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளதாகவும் இலங்கையை சேர்ந்த சசிகலா என்பவர் தரிசனம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சபரிமலை தந்திரி அறநிலைய துறை ஊழியர் அல்ல என்றும் அவர் சபரிமலை கையேட்டின் விதிமுறைகளை பின்பற்ற கடமைப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com