ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக்...

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில், ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக் பொருள் கலந்து இருந்தாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக்...
Published on
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில், ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக் பொருள் கலந்து இருந்தாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ச‌ச்சின் ஜாம்தார் என்பவர் ஆன்லைனில், பன்னீர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். அதில் பிளாஸ்டிக் பொருள் கலந்திருப்பதை கண்ட ச‌ச்சின், ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டுள்ளார். ஓட்டல் உரிமையாளர், உணவை டெலிவரி செய்தவர் மீது குற்றம்சாட்டவே, ச‌ச்சின் போலீசாரை அணுகியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், புகார் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com