ஓண விழாவை வரவேற்கும் திருப்புனித்துறா அத்தச்சமயம் விழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஊர்வலத்தை காண பொதுமக்கள், வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் திரண்டனர்.