ஓணம் பண்டிகை - நடனமாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி

x

ஓணம் கொண்டாட்டத்தில் சக ஊழியர்களுடன் நடனமாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரியின் வீடியோ வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேரளாவில் வரும் 5ஆம் தேதி ஓணம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரளா முழுக்க விழாக்கோலம் பூண்டுள்ளது. கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், எர்ணாகுளம் எஸ்பி அலுவலகத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில், ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஹேமலதா, சக ஊழியர்களுடன் சேர்ந்து திருவாதிரை நடனமாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்