காவல்துறை தலைமையகத்தில் களைகட்டிய ஓணம்

x

காவல்துறை தலைமையகத்தில் களைகட்டிய ஓணம்

கேரள காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டம் களைகட்டியது. திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் பூக்கோலம் போடப்பட்டது. காவலர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். செண்டை மேளம் முழங்க காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெண் காவலர்கள், ஓணம் நடனமாடி சக காவலர்களையும் குடும்பத்தினரையும் உற்சாகப்படுத்தினர். கேரள முதல்வர் பினராயி விஜயன், டிஜிபி ரவாடா சந்திரசேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்