79வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் சொன்ன தகவல்
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த பொருளாதார நாடாக மாறும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அடிப்படை வசதிகளை குடிமக்களின் உரிமைகளாக கருதி அரசு நிறைவேற்றி வருகிறது என்றார்.
கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத் துறையில், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகள் மூலமாக முன்னுதாரண மாற்றத்தை நாம் காண்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 55 கோடிக்கும் அதிகமானோர் காப்பீடு பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு இந்த சேவையை விரிவுபடுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
