Omni Buses Strike Latest News | ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவையை தொடர்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், கடந்த 7ம் தேதி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறை திடீரென பறிமுதல் செய்து, 70 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதித்தது.
இதேபோல், கடந்த வாரம் கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு மொத்தம் 1 கோடி 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதற்கு காரணமாக அண்டை மாநிலங்கள் கூறுவது, 'தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிப்பதாகவும், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளன.
இதனால் ஆபரேட்டர்கள் இரட்டை வரியையும், அபராதங்களையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதன் காரணமாக, கடந்த 7ம் தேதி முதல் கேரளா நோக்கி இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும்,
இதனால் சபரிமலை பயணிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் பேசியதில் அரசிடம் பேசி நல்ல முடிவு சொல்வதாக தெரிவித்து இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்த பிரச்னைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில், தங்களது ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடரும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
