"தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன்" : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்

தேர்தலில் வெற்றி பெறும் வரை, சுயேட்சை வேட்பாளர் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக யாருடனும் பேசாமல் இருந்து வருகிறார்.
"தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன்" : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்
Published on
பெங்களூர் தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஆம்ப்ரோஸ் டி மெல்லோ என்பவரின் முடிவு அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 62 வயதான இவர், களம் காணும் மூன்றாவது தேர்தல் இது. இவர் ஏற்கனவே 2014 பாராளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியிலும், 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். தேர்தலில் வெற்றி பெறும் வரை யாருடனும் பேசமாட்டேன் என்பதே இவரின் நிலைப்பாடு. எல்லா கேள்விகளுக்குமான பதிலை எழுத்தின் மூலம் வெளிப்படுத்தும் இவர் கடந்த 14 ஆண்டுகளாக மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். துண்டு பிரசாரம் மூலம் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வரும் ஆம்ப்ரோஸ் டி மெல்லோ, தனது நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com