Oil | Tariff | Central Govt | குறையும் சமையல் எண்ணெய் விலை? - மத்திய அரசு அதிரடி
Oil | Tariff | Central Govt | குறையும் சமையல் எண்ணெய் விலை? - மத்திய அரசு அதிரடி #CentralGovt #Oil #Tariff சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கச்சா பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான வரி 32.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான மொத்த வரியும் 16.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செலவு குறைவதால், உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரிக் குறைப்பின் முழுப் பலனும் நுகர்வோருக்கு சென்றடைய வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
