Oil | Raid | பெட்டி பெட்டியாக போலி சமையல் எண்ணெய் - பரபரப்பை கிளப்பிய ரெய்டு.. பகீர் பின்னணி
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்... உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அயோத்தியாவில் உள்ள ஒரு கிடங்கில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், சுமார் 500 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போலி சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த எண்ணெய் பாக்கெட்டுகள், ஒரிஜினல் பிராண்டினுடைய பேக்கிங் போலவே அச்சு அசலாகத் தயாரிக்கப்பட்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. துளிக்கூட சந்தேகம் வராத வகையில் தத்ரூபமாகப் பேக்கிங் செய்யப்பட்டு, விற்பனைக்காகச் சந்தைக்கு அனுப்பத் தயாராக இருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. பிரபல நிறுவனங்களின் பெயரில் இவ்வளவு துல்லியமாக போலி தயாரிப்புகள் தயாரிக்கப்படுவது நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
