ஓ.டி.டி. தளங்களை கட்டுப்படுத்தும் விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஓ.டி.டி. தளங்களை கட்டுப்படுத்தும் விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

ஒ.டி.டி. தளங்களில் வரக்கூடிய கருத்துக்களை உன்னிப்பாக கவனிக்க கூடிய பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தளங்களில் வெளியாகும் திரைப் படங்களில் உள்ள கருத்துக்கள் தொடர்பாக பொது மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதல்வர் களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புகார்களை விசாரிப்பதற்காக தனி அமைப்பை உருவாக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒ.டி.டி. தளங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு சமூக வலைதள ஊடகங்களையும் கண்காணிப்பு பணிகளை உருவாக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடரப்பட்ட மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com