ஒடிசா மாநிலம், புவனேஸ்வரை அடுத்துள்ள பூரி ஜெகநாத் கோவிலுக்கு, பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், எந்தப் பிரச்சினையும் இல்லாமல், அமைதியாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களை யாரும் அச்சுறுத்துவதில்லை எனவும் தெரிவித்தனர். இந்து சம்பிரதாயங்களை கடை பிடிப்பதில் எந்த தடையும் இல்லை எனவும், கராச்சியில் ரத யாத்திரைகள் நடத்த தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர், இந்தியாவிற்கு வந்து, இந்துக் கோவில்களை காண ஆவலாக இருப்பதால், அவர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வாழ் இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர்.