ஒடிசா : ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணி... கையில் டீ கப்புடன் ஏறியதால் விபரீதம்

ஒடிசா மாநிலத்தில், நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற ஒரு பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஒடிசா : ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணி... கையில் டீ கப்புடன் ஏறியதால் விபரீதம்
Published on
ஒடிசா மாநிலத்தில், நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற ஒரு பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ராஜேஷ் தல்வார் என்ற பயணி, ஹவ்ராவில் இருந்து சாம்பல்பூருக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். ஜார்சுகுடா ரயில் நிலையம் வந்தபோது அவர் டீ வாங்குவதற்காக கீழே இறங்கினார். அப்போது ரயில் நகரவே உடனடியாக கையில் டீ கப்புடன் ஏற முற்பட்ட போது ராஜேஷ் தல்வார் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார் ரயிலை நிறுத்தி ராஜேஷ் தல்வாரை மீட்டனர். ராஜேஷ் தல்வார் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
X

Thanthi TV
www.thanthitv.com