Odisha | Insta Reels | ரீல்ஸ் மோகத்தால் நொடியில் பிரிந்த சிறுவனின் உயிர்.. குலைநடுங்கவிடும் வீடியோ

x

ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் தண்டவாளம் அருகே நின்று ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.

ஜனகதேய்பூர் பகுதியில், தனது தாயுடன் கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய அந்த சிறுவன், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதற்காக, தண்டவாளம் அருகே நின்று ரீல்ஸ் பதிவு செய்து கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ரயில்வே போலீசார், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பதை கைவிடுமாறு காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்களும், சிறுவர்களும் உயிரை விடும் சம்பவங்கள் தொடர்வது வேதனை அளிப்பதாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்